Cinema

டுவிட்டரில் ரசிகர்கள் ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக நன்றி சொல்லும் ஆர்யா

சார்பட்டா பரம்பரை படத்தில் நாயகனாக நடித்து பெரும் வரவேற்பை ஆர்யா பெற்றுள்ளார். அவரது கதாபாத்திரம் அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் அவரைப்போலவே மிமிக்ரி செய்து தங்களது டுவிட்டர் பக்கங்களில் போட்டு வருகின்றனர்.

இதனை அறிந்த ஆர்யா ஒவ்வொரு ரசிகர்களின் மிமிக்ரி வீடியோக்களையும் தனது டுவிடட்ர் பக்கத்தில் பகிர்ந்து அவர்களுக்கு பிரத்தியேகமாக நன்றிகளையும் தெரிவித்து வருகிறார். இதனால் அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர். ஆர்யாவின் டுவிட்டர் பக்கத்திற்குச் சென்றால் எல்லா மிமிக்ரிகளையும் பார்க்கலாம்.

Leave a Reply